நுாற்றாண்டு விழா கண்ட பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில் இரும்பு பிளேட் சேதமடைந்து டிச.,4 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ரத்தானது. பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ரயிலில் ராமேஸ்வரம் வரமுடியாமல் பாதித்தினர்.
ராமேஸ்வரத்தில் வணிக ரீதியாகவும் பல லட்ச ரூபாய் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், துாக்கு பாலத்தில் 6.5 டன் புதிய பிளேட், புதிய இரும்பு வீல்கள் பொருத்தி பாலத்திற்கு வலுசேர்த்தனர். மேலும் உப்பு காற்றில் துருப்பிடிக்காத அலுமினியம் பெயின்ட் பூசி பாலம் புதுப்பொலிவுடன் காட்சியளித்தது. இதன்பின் ரயில்வே பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து பாலத்தில் அதிர்வு இல்லை என உறுதி செய்த பிறகும், போக்குவரத்து துவக்கவில்லை.
இந்நிலையில் இன்றும், நாளையும் பாம்பன் துாக்கு பாலத்தை தென்னக ரயில்வே பாலம் பொறியாளர், பாதுகாப்பு ஆணைய குழு மற்றும் மதுரை கோட்ட மேலாளர் இறுதி ஆய்வு செய்ய உள்ளனர். இதன் பின்...
more... பிப்.,25ல் பாலத்தில் பயணிகளுடன் ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் இயக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
News Courtesy – Dinamalar