காரைக்கால், செப்.6: மக்களின் ஆர்வத்தை பார்த்து காரைக்கால்-பேரளம் ரயில்பாதை திட்டத்திற்கான ஒப்புதல் குறித்து, ரயில்வே போர்டுக்கு கடிதம் எழுதவுள்ளேன் என, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதய்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.காரைக்கால்-திருச்சி இடையே மின்சார ரயில் இயக்குவதற்கான திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, காரைக்கால்-திருச்சி இடையே மின்சார ரயில்வே பாதை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்பணியை ஆய்வு செய்வதற்காக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதய்குமார் ரெட்டி காரைக்கால் வந்தார். பணிகளை ஆய்வு செய்த அவர், நிருபர்களிடம் கூறியது: காரைக்கால்-திருச்சி இடையே மின்சார ரயில்வே பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நடப்பு நிதியாண்டில் திருச்சி-காரைக்கால் இடையே நடைபெற்று வரும் மின்சார ரயில் பாதை திட்டம் நிறைவு பெறும் என நம்புகிறோம்.. காரைக்கால்-பேரளம் இடையே அகல ரயில்பாதை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. ஆனால், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களிடமிருந்து காரைக்கால்-பேரளம் அகல ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்றும்படி அதிகமான மனுக்கள் வருகிறது. இந்த ஆர்வத்தை பார்த்து, காரைக்கால்-பேரளம் இடையே அகல ரயில்பாதை திட்டம் குறித்து, மத்திய ரயிவே போர்டுக்கு கடிதம் எழுதவுள்ளேன். என்றார்.
முன்னதாக, ரயில்வே...
more... நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் ஹாஜி கபூலா சாகிப் வலியுல்லா தர்க்கா வாசலில், ரயில்வே நிர்வாகம் அனுமதி இன்றி தர்க்கா நிர்வாகிகள் அமைத்த சிமென்ட் தரையை அகற்ற ரயில்வே நிர்வாகம் பொக்லைன் எந்திரத்துடன் தயாராது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த தர்க்கா நிர்வாகிகள், உதய்குமார் ரெட்டியை நேரில் சந்தித்து, நாங்களே தரையை அகற்றிவிடுகிறோம் என உறுதி அளித்தனர். அதன்பேரில் உதய்குமார் ரெட்டி உடனே அகற்றுமாறு உத்தரவிட்டு சென்றார். நடைபயிற்சி சென்றவர்களுக்கு அபராதம்காரைக்கால் ரயில் நிலையத்தில் காலை மற்றும் மாலை வேளையில் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். நேற்றும் அவ்வாறே பலர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதய்குமார் ரெட்டி வருகையையொட்டி, நேற்று காலை ரயில்வே அதிகாரிகள் திடீரென ரயில்வே நிலையத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட பெண்கள் உள்ளிட்டோரை நிறுத்தி, பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் சென்ற குற்றத்திற்காக ரூ.350 அபராதம் கேட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் யூசுப், மதிமுக மாவட்ட செயலாளர் அம்பலவாணன் உள்ளிட்ட பலர் ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர், மத்திய, மாநில அரசுகள் நிதி இல்லாமல் உள்ளது. ரயில்வே நிலையத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள கட்டணம் வசூல் செய்தால் நன்றாக இருக்கும் என்றனர். அதையும் மீறி, பெண்கள் உள்ளிட்ட 3 பேரிடம் தலா ரூ.350 அபராதம் வசூல் செய்யப்பட்டது.