Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Admin
 Followed
 Rating
 Correct
 Wrong
 Stamp
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt
News Super Search
 ↓ 
×
Member:
Posting Date From:
Posting Date To:
Category:
Zone:
Language:
IR Press Release:

Search
  Go  

हम RailFan - हमेशा पंखों पे

Full Site Search
  Full Site Search  
 
Sun Aug 18 20:48:42 IST
Home
Trains
ΣChains
Atlas
PNR
Forum
Stream
Gallery
News
FAQ
Trips/Spottings
Login
Feedback
Advanced Search
<<prev entry    next entry>>
News Entry# 386988
  
Jul 17 (20:52) தமிழகம் முகப்பு > செய்திகள் > தமிழகம் ரயில் நிலையங்கள் தோறும் நிறுத்தி வைக்கப்படுகிறது: தினமும் காலதாமதமாக வரும் ஈரோடு - நெல்லை ரயில் (www.dinakaran.com)
Other News
SR/Southern
0 Followers
3310 views

News Entry# 386988  Blog Entry# 4380495   
  Past Edits
Jul 17 2019 (20:53)
Station Tag: Erode Junction/ED added by Skumar^~/1911491

Jul 17 2019 (20:53)
Station Tag: Tirunelveli Junction/TEN added by Skumar^~/1911491

Jul 17 2019 (20:53)
Train Tag: Erode - Tirunelveli Passenger/56825 added by Skumar^~/1911491
நெல்லை: ரயில்வே ஸ்டேஷன்கள் தோறும் நிறுத்தி வைக்கப்படுவதால் ஈரோடு- நெல்லை பயணிகள் ரயில் தினமும் காலதாமதமாக நெல்லைக்கு வந்து சேருகிறது. இதனால் வெளியிடங்களுக்கு செல்வோர் இரவு ேநரத்தில் திண்டாடுகின்றனர். நெல்லை-ஈரோடு- மயிலாடுதுறை இடையே தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மறுமார்க்கமாக இதே ரயில் ஈரோட்டில் இருந்து தினமும் 12.35 மணிக்கு புறப்பட்டு நெல்லை வருகிறது. இந்த ரயில் ஊஞ்சலூர், கொடுமுடி வழியாக திண்டுக்கல்லுக்கு மாலை 4.15 மணிக்கு வந்துவிடுகிறது. அதன் பின்னர் ரயில் திண்டுக்கல்லில் மயிலாடுதுறையில் இருந்து வரும் இணைப்பு ரயிலுக்காக சுமார் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது.இரண்டு ரயிலும் இணைக்கப்பட்ட பின்னர் புறப்படும் ஈரோடு- நெல்லை பயணிகள் ரயிலுக்கு வருகிற வழியெல்லாம் சோதனைகள் காத்திருக்கின்றன. குறிப்பாக தென்மாவட்டங்களில் இருந்து செல்லும் அத்தனை எக்ஸ்பிரஸ் ரயில்களையும் எதிர்ெகாள்ள வேண்டியதிருப்பதால் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் கூடுதல் நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. நெல்லை, கன்னியாகுமரி, ெசந்தூர், அனந்தபுரி, முத்துநகர், பெங்களூர் உள்ளிட்ட பல ரயில்களை எதிர்கொண்ட பின்னரே ஈரோடு பயணிகள் ரயில் நெல்லைக்கு வருகிறது. இதற்காக மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்து நிற்கிறது. சில சமயங்களில் மணியாச்சி வந்தும் கூட கிராசிங் என்ற பெயரில் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. பின்னர் இரவு 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் நெல்லை வந்து சேருகிறது. இதனால் இரவு நேரத்தில் வந்து இறங்கும்...
more...
பயணிகள் படாதபாடு படுகின்றனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் அருகிலுள்ள மேலப்பாளையம், தச்சநல்லூர், டவுன் செல்லும் பயணிகளுக்கு கூட பஸ்கள் கிடைப்பதில்லை. அம்ைப, சேரன்மகாதேவி, தென்காசி செல்லும் பயணிகள் ரயில் நிலையத்திலே காத்திருக்கின்றனர். எனவே ஈரோடு- நெல்லை பயணிகள் ரயிலை விரைந்து நெல்லைக்கு வருமாறு இயக்கிட வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.பாலருவி எக்ஸ்பிரசிற்கு இணைப்புஈரோடு - நெல்லை பாசஞ்சர் ரயில் கடந்தாண்டு வரை இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்து சேர்ந்தது. அந்த ரயிலில் இருந்து இறங்கும் பயணிகள் விரைந்து ஊர்களுக்கு செல்ல பஸ்களை பிடிப்பது வழக்கமாக இருந்தது. மீண்டும் அதே 10.30 மணிக்கு ஈரோடு ரயில் நெல்லை வந்து சேர்ந்தால் நெல்லை மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் நெல்லையில் இருந்து பாலக்காட்டிற்கு இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் தற்போது புதிய கால அட்டவணைப்படி 10.30 மணிக்கு பதிலாக 10.45 மணிக்கு கிளம்புகிறது. ஈரோடு, மதுரையில் இருந்து வரும் பயணிகள் பாலருவி எக்ஸ்பிரசை பிடித்து சேரன்மகாதேவி, அம்பை, தென்காசி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் வழிபிறக்கும்.
Scroll to Top
Scroll to Bottom
Go to Mobile site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy